தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பொள்ளாச்சி பகுதியில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றிய அலுவலங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.