அதிமுக எம்எல்ஏ அம்மன் கே. அர்ஜுனனுக்குக் கரோனா! - Corona confirms AIADMK MLA
09:37 July 05
கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனனுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அர்ஜுனனின் மகள், மருமகன் பேத்தி ஆகிய மூவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் அர்ஜுனனின் மனைவிக்குக் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று அவருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர், இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே. பழனி, சதன் பிரபாகரன், குமரகுரு மற்றும் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோருக்குத் கரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:7 மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்குத் தடை!