தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டணி கட்சியின் பெயரை மாற்றி உச்சரித்த அதிமுக அமைச்சர்! - s.p.velumani

கோவை: அதிமுக பரப்புரை கூட்டத்தின்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பெயரை தேசிய திராவிட முன்னேற்ற கழகம் என தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாற்றி உச்சரித்தது, தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூட்டணி கட்சியின் பெயரை மாற்றி உச்சரித்த அதிமுக அமைச்சர் !

By

Published : Mar 24, 2019, 10:27 PM IST

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை, தமிழகம் முழுவதும் அனல் பறக்க சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மகேந்திரனுக்கு வாக்கு சேகரிக்க தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேர்தல் பரப்புரையில் நேற்று மாலை ஈடுபட்டார்.

அப்போது சூலூர் தொகுதி தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரனின் என்று கூற முயற்சித்தபோது, கட்சியின் பெயரை தேசிய திராவிட முன்னேற்ற கழகம் என தவறாக கூறிவிட்டார். தவறாக கூறுவதை பார்த்து, அதிர்ச்சியடைந்த தினகரன், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று கூறுங்கள் என்று அமைச்சருக்கு எடுத்துக் கொடுத்தார். அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கையில் கொடுக்கப்பட்டுள்ள பேப்பரில் அப்படி தான் எழுதியுள்ளது என கூறி சமாளித்தார்.

கூட்டணி கட்சியின் பெயரை மாற்றி உச்சரித்த அதிமுக அமைச்சர் !

ABOUT THE AUTHOR

...view details