மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இச்சட்டத்திற்கு எதிராக போராடி வந்த விவசாயிகளில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவை ரெட் கிராஸ் அருகே நடைபெற்றது. அப்போது உயிரிழந்த விவசாயிகளின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் விவசாய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம்! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்
கோயம்புத்தூர்: டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம்
இதையும் படிங்க:திருச்சியில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம்
Last Updated : Dec 23, 2020, 7:04 PM IST