தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை தாக்கம்: நான்காயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் சேதம் - சிறுவானி நீர்
கோவை: சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக நான்காயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் நீரில் முழ்கி முற்றிலும் நாசமானது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான சாடிவயல், தொண்டாமுத்தூர், நரசிபுரம், போளுவாம்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு விவசாய பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, ஆலாந்துறை பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் தற்போது பெய்து வரும் கனமழையால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மழை வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.