கோயம்புத்தூர்: காருண்யா பல்கலைக்கழகத்தின் 26ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைவரும், விண்வெளித்துறைக்கான இந்திய அரசின் செயலாளருமான சோமனாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 1,700 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அக்னிபாத் பயிற்சி முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதுவரை அரசு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பணிகள் செய்து வந்த இஸ்ரோ, இனி தனியாருக்கும் சேவை செய்ய முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வர்த்தக ரீதியாகவும் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். தனியாருக்கு புதிதாக சேட்டிலைட் பயன்பாடு வழங்கப்படும்.