கோயம்புத்தூர்: மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறி வருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டம் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் திட்டம் - Agnipath Scheme issue today
அக்னிபத் திட்டம் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் திட்டம் என தபெதிக மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தபெதிக மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, “மோடி அரசு பொய் பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தது. இந்த அக்னிபத் திட்டம், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆட்களை திரட்டும் திட்டம். இதற்கு ராஜ்நாத் சிங்கும் உடந்தையாக இருக்கிறார். உடனடியாக இந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"அக்னிபத் திட்டம்" இளைஞர்களுக்கான வரப்பிரசாதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி