கன்னியாகுமரி மாவட்டதை சேர்ந்தவர் லட்சுமி சரண் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ’’அகஸ்தீஸ்வரம் பகுதியில் 75 எக்டேரில் சுமார் 300 ஆண்டுகளாக உப்பளத் தொழில் செய்து வருகிறோம். மேலும், எங்கள் பகுதியில் ஏராளமான உப்பளங்கள் உள்ளன. அருகே விளை நிலங்களும் உள்ளன. பழையாறு ஆறு அருகே உள்ள கடலில் கலக்கிறது. தற்போது, அரசு பழையாற்றில் ஒரு தடுப்பணையை கட்ட முயற்சி செய்கிறது. அவ்வாறு தடுப்பணையை கட்டினால் எங்கள் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து எங்களுடைய உப்பளத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.
கடல் பகுதியில் பெரிய அலைகள் வரக்கூடிய பகுதியிலிருந்து 50 அடி தூரத்தில் இந்த தடுப்பணை உள்ளது. கடல் நீர் அருகே உள்ள ஊர் பகுதிக்குள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இப்பகுதியில், உள்ள அரிய வகை ஆமை போன்ற உயிரினங்களும் அழியக் கூடிய அபாயம் உள்ளது .
அகஸ்தீஸ்வரம் பழையாற்றில் தடுப்பணை வழக்கு: பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு! கடந்த 300 ஆண்டுகளாக இப்பகுதியில் நடந்து வரும் உப்பு தயாரிக்கும் தொழிலும், முற்றிலும் அழியும் அபாயமும் ஏற்பட உள்ளது. எங்களுக்கு வரும் 2026 ஆண்டு வரை உப்பு தயாரிக்கும் குத்தகை உரிமையும் உள்ளது. தற்போது, இப்பகுதியில் தடுப்பணை கட்டினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இப்பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளார் .
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை பொறியாளர், ஆகியோர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற (ஜூன் 29)ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ’கரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை’ - பேரவையில் செந்தில் பாலாஜி விளக்கம்