தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் காத்திருப்புப் போராட்டம் - Waiting Struggle Against Citizenship Amendment Act

கோவை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாத்துகள், அமைப்புகள் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்து.

Against Citizenship Amendment Act
Against Citizenship Amendment Act

By

Published : Feb 20, 2020, 4:38 PM IST

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் வலுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜாம்த்துகள் சார்பில் நாள்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் கோவை உக்கடம் ஆத்துபாலத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் இரவிலிருந்து தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்துள்ளார்கள்.

இஸ்லாமியர்கள் காத்திருப்புப் போராட்டம்

இதற்கு பிராயச்சித்தமாக மற்ற மாநிலங்களைப் போல நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களது தொடர் காத்திருப்புப் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details