கோவைஅருகே வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்தில் நேற்று ஒரு மணி அளவில் சிறுகுன்றா பகுதியில் இருந்து குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருந்த யானையை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு வராத வண்ணம் பாதுகாத்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விரட்டியடித்தனர்.
மேலும், இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்பு மற்றும் சத்துணவுக் கூடங்கள், மகளிர் சுய உதவி குழு கடைகளை உடைத்து அதில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை உண்பதற்காகவே குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.