நாடு முழுவதும் நேற்று உள்நாட்டு பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டதையடுத்து, நேற்று கோவை விமான நிலையத்திற்கு சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதியிலிருந்து நான்கு பயணிகள் விமானம் மூலம் மக்கள் சொந்த ஊருக்கு திரும்பிவந்தனர்.
21 நாள்களுக்குப் பிறகு கோவையில் கரோனா! - 21 நாட்களுக்கு பிறகு கோவையில் கரோனா
11:16 May 26
கோவையில் 21 நாள்களுக்குப் பிறகு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
விமானம் மூலம் கோவை வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர், சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவர், நேற்று இரவு 8 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை அழைத்துவரப்பட்டு தனியார் உணவகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். இளைஞருடன் வந்த மற்ற பயணிகளுக்குத் தொற்று இல்லாத நிலையில் அவர்கள் 14 நாள்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், 23 நாள்களுக்குப் பிறகு தொற்று ஏற்பட்டிருந்தாலும் தொற்று ஏற்பட்ட நபர் சென்னை நோயாளியாகக் கருதப்பட்டு அங்குள்ள பட்டியலிலேயே சேர்க்கப்படுவார் எனச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்திய அமெரிக்க தம்பதி கண்டுபிடித்த விலை மலிவான வென்டிலேட்டர்