கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மூடப்பட்ட, கோயம்புத்தூர் மாவட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்குப் பின் திறக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவுவதனால் காவலர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் போத்தனூர் காவல் நிலைய காவலர்களுக்கு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்காரணமாக அவர்கள் பணிபுரிந்த அந்த காவல் நிலையம் ஏப்ரல் 24ஆம் தேதி மூடப்பட்டு, அருகில் இருந்த மண்டபங்களில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அதன்பின் 18 நாட்கள் கழித்து மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் இன்று( மே13) திறக்கப்பட்டது.