தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் - Advocates

கோயம்புத்தூர்: வாகன விபத்து சட்டத்தில்  பழைய நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு

By

Published : Apr 30, 2019, 5:01 PM IST

தமிழ்நாட்டில் தற்போது மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படுகிறது. மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் தீர்வு காண்பது வழக்கம்.

இந்நிலையில் மோட்டார் வாகன விபத்து குறித்து புதிய சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதன்படி சமரசம் முறையில் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதுடன், வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை சட்டரீதியாக பெற்று தர முடியாத சூழல் ஏற்படும். ஆதலால் மோட்டர் வாகன விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் பழையபடி சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி அட்வகேட்ஸ் கூட்ட அமைப்பு சார்பில் JM-1 நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details