தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் தர்ணா - எஸ்.பி.வேலுமணி தலைமையில் போராட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள வெளி மாவட்ட திமுகவினரை வெளியேற்ற வலியுறுத்தி உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தர்ணா போரட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

திமுக-வினரைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
திமுக-வினரைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

By

Published : Feb 18, 2022, 2:40 PM IST

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வெளி மாவட்ட திமுகவினரை வெளியேற்ற வலியுறுத்தி எஸ்.பி. வேலுமணி தலைமையில் தர்ணா போரட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் போராட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் தர்ணா

பல்வேறு முழக்கங்களுடன் போராட்டம்

அப்போது திமுகவினர், காவல் துறை, மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் வாக்குப்பதிவின்போது துணை ராணுவப்படை பாதுகாப்பு வேண்டும் என்றும், தேர்தல் பார்வையாளரை மாற்றக்கோரியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்மார்ட் சிட்டியாக கோவை மாறவில்லை: அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details