தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிமுக வளர்ச்சி கொண்டுவந்துள்ளது: அமைச்சர் எஸ் பி வேலுமணி - கொயம்பத்தூர்

கோயம்புத்தூர்: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சி வளர்ச்சியை கொண்டுவந்துள்ளதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

VELUMANI

By

Published : May 18, 2019, 3:08 PM IST

சூலூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கந்தசாமி, சூலூர் அண்ணா சீரணி அரங்கம் முன்பாக நேற்று மாலை தனது பரப்புரையை நிறைவு செய்தார்.

பரப்புரை நிறைவு நிகழ்ச்சியில் அதிமுக பேச்சாளர் குண்டு கல்யாணம், அமைச்சர் எஸ் பி வேலுணி, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது மக்களிடையே உரையாற்றிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, வெளியூர் காரர்ளுக்கு ஒட்டு போட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும் எனவும், எனவே கந்தசாமிக்கு வாக்களியுங்கள் எனத் தெரிவித்தார்.

"கந்தசாமி உள்ளுர்க்கார்ர் என்பதால் அவரிடம் பிரச்னைகளை எளிதாக முறையிட முடியும் என்றும்,19ஆம் தேதி காலை இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்" என்றார்.

மேலும், 50 ஆண்டுக் காலத்தில் செய்யாத வளர்ச்சியைக் கடந்த 5 ஆண்டுகளில் இந்த (அதிமுக) ஆட்சியில் செய்துள்ளோம் எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details