கடந்த ஜனவரி 25ஆம் தேதி அதிமுக பெயரில் போலி இணையதளம் மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுத்ததாகக் குற்றம்சாட்டி அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று ஜாமினில் வெளிவந்த கே.சி. பழனிச்சாமிக்குத் தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
ஜாமினில் வெளிவந்த அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி - tamilnews
கோவை: போலி இணையதளம் மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி ஜாமினில் வெளிவந்தார்.
![ஜாமினில் வெளிவந்த அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி எம்.பி. கே.சி பழனிச்சாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6056443-thumbnail-3x2-cbe.jpg)
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.சி. பழனிச்சாமி பேசுகையில், "என் மீது இவ்வாறு வழக்குகள் போட்டால் நான் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிக்கு மாறி விடுவேன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒரு போதும் அதிமுகவிலிருந்து விலக மாட்டேன். கட்சிப் பொதுச்செயலாளர் விவகாரத்தில் அடிப்படை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியதை தான் நான் இணையதளத்தில் வெளியிட்டேன்" என்றார்.
இதையும் படிங்க:சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது
TAGGED:
coimbatore news