கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூசாரிப்பட்டி, ஏரிப்பட்டி, சுந்தர கவுண்டனூர், திப்பம்பட்டி, ஏ.நாகூர், ஆவல்பட்டியில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பின சேர்க்கை என முன்னாள் அமைச்சரும், உடுமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில் கட்சி நிர்வாகிகளிடம் உறுப்பினர் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைப் பெற்றுக் கொண்டும், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தைக் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உடுமலை ராதாகிருஷ்ணன், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் பல நலத்திட்டங்களைக் கடந்த ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்குச் சேரும் வகையாக இருந்தது. அதாவது தாலிக்குத் தங்கம், முதியோர் மற்றும் விதவைகள் உதவித்தொகை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆடு, மாடு மற்றும் கோழிகள் என அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த இருக்கும் இடத்தில் தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்