தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக நிர்வாகியிடம் தகராறு; ஷாருக்கான், சல்மான்கான் கைது! - கோவையில் திமுக அதிமுக இடையே மோதல்

கோயம்புத்தூர்: அதிமுக நிர்வாகியை தட்டிகேட்ட திமுக நிர்வாகிகளான ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிமுக நிர்வாகியை தட்டிகேட்ட திமுக
அதிமுக நிர்வாகியை தட்டிகேட்ட திமுக

By

Published : Jan 4, 2021, 10:56 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக உறுப்பினர் ரபீக் (42). இவர் நேற்று (ஜன.04) மதுக்கரை காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த திமுகவைச் சேர்ந்த மாணவரணி அமைப்பாளர் சல்மான்கான், அவரது சகோதரர் ஷாருக்கான் ஆகியோர் ரபீக்கிடம், முகநூலில் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த பெண்ணை குறித்து பதிவுட்டது பற்றி கேட்டுள்ளார்.

அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சல்மான், ஷாருக்கான் ஆகியோர் ரபீக்கை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதிமுக-திமுக இடையே மோதல்:

உடனடியாக அங்கு ரபீக்கிற்கு ஆதரவாக அதிமுகவினர் திரண்டனர். சல்மான், ஷாருக்கானுக்கு ஆதரவாக திமுகவினரும் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை காவல் துறையினர் இரு தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, தாக்குதல் நடத்திய சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று (ஜன.03) சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து, முகநூலில் பெண்ணை பற்றி பதவிட்ட அதிமுகவினரை கைது செய்யாமல், அதனை தட்டிகேட்ட திமுகவினரை கைது செய்தது எவ்வகையில் நியாயம் என திமுகவினர் காவல் துறையினரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக - திமுக இடையே போஸ்டர் மோதல்!

ABOUT THE AUTHOR

...view details