சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயராம் போட்டியிடுகிறார். தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டுவரும் இவர், நேற்று (மார்ச் 22) பீளமேடு பகுதியில் உள்ள காய்கறிச் சந்தையில் காய்கறி வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டியதோடு, காய்கறி விற்று மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் அதிமுக செய்த நன்மைகளை எடுத்துக் கூறினார்.
காய்கறி விற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்! - Coimbatore District News
அதிமுக வேட்பாளர் ஜெயராம் காய்கறி விற்று உழவர்களிடமும் வியாபாரிகளிடமும் அதிமுக செய்த நலத்திட்டங்களை எடுத்துரைத்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அதிமுக வேட்பாளர் ஜெயராம்
மேலும் இவரை ஆதரித்து இதே தொகுதியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தலை முடியில் இரட்டை இலை சிகை அலங்காரம் செய்துகொண்டு ஆதரவு திரட்டிவருகிறார்.
இதையும் படிங்க:உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்!