தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை அறிவு சார் நூலகத்தில் இடம்பெற்றிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றம்!

Adiyogi Photo Removed: கோவை அறிவு சார் மையத்தில் இடம்பெற்றிருந்த ஆதியோகி புகைப்படத்தை அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தபெதிக வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது ஆதியோகி புகைப்படம் அகற்றப்பட்டு உள்ளது.

Removal of Adiyogi photo from coimbatore Knowledge centre
அறிவு சார் நூலகத்தில் இடம்பெற்றிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 2:10 PM IST

கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சி சார்பில் ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டு உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையம், 20 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை, தமிழர் பாரம்பரிய சிலைகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.5) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த அறிவு சார் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் வைக்கும் அலமாரியில், கோவையின் பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் அடையாளச் சின்னங்கள் இடம்பெற்று உள்ளன. இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள அலமாரியில் ஆதியோகி புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து, ஆதியோகி படத்தை அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியது.

இதையும் படிங்க:“இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா?” பெண்ணை தரக்குறைவாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர்!

மேலும், இது தொடர்பாக தபெதிக வெளியிட்டிருந்த அறிக்கையில், அறிவு சார் மையத்திற்கும், ஆதியோகிக்கும் என்ன சம்பந்தம் என்றும், ஏற்கனவே திட்டமிட்டு கோவையின் அடையாளம் என்பது போல் ஈசாவை உருவகப்படுத்தி வருவதாகவும், தற்போது அறிவு சார் மையத்தில் ஆதியோகி படத்தை நுழைத்து இருப்பதாகவும் கூறி, அதனை உடனடியாக அரசு அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

மேலும், இதன் காரணமாக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதனை அகற்றாத பட்சத்தில், தபெதிக இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அறிவு சார் மைத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தபெதிக நன்றியைத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கோபி அருகே கல்லூரிப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details