தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறையில் நடிகை விந்தியா தேர்தல் பரப்புரை! - dmk candidate

கோயம்புத்தூர்: வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.அமுல் கந்தசாமியை ஆதரித்து நடிகை விந்தியா வால்பாறை காந்தி சிலை அருகே பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.

நடிகை வித்யா தேர்தல் பரப்புரை
நடிகை வித்யா தேர்தல் பரப்புரை

By

Published : Mar 28, 2021, 11:08 PM IST

நடிகை வித்யா மேற்கொண்ட பரப்புரையில் பேசியதாவது, 'திமுகவினர் ஆட்சியில் இருக்கும் பொழுது எவ்வித திட்டங்களையும் மக்களுக்கு நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிவித்தால் மட்டுமே விளம்பரம் கொடுத்து மக்களைச் சந்தித்து ஓட்டு கேட்டு ஏமாற்ற வருவார்கள்.

திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி தன் குடும்பத்தின் வளர்ச்சியை மட்டுமே முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்.

அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களின் நலனுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். சமூக வலைதளங்களில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் சென்று பார்த்தால் திமுகவிற்கு ஓட்டுப் போடும் எண்ணம் ஏற்படாது.

ஆகவே,வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கே. அமுல் கந்தசாமியை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும்’ என பரப்புரை மேற்கொண்டார். இதில் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் தூரிவாசு, கூட்டுறவு வங்கித் தலைவர் ஹமீது, நகரசெயலாளர் பொன் கணேஷ், ஒன்றிய செயலாளர்கள் அப்புசாமி கார்த்திகேயன், மா. சுந்தரம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாந்தலிங்ககுமார் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:சாத்தூரில் ஆடல் பாடலுடன் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details