தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"என் இளமைக்கு காரணம் என்ன தெரியுமா"? - நடிகை நதியா விளக்கம் - LGM film crew

பிரபல கிரிகெட் வீரர் தோனி தயாரிப்பில் உருவாகும் படம் எல்ஜிஎம். இந்த பட குழுவினர்களோடு கோவையில் கலகலப்பாக நடந்த செய்தியாளர்கள் சந்த்திப்பில் தனது இளமைக்கான காரணத்தை நடிகை நதியா கூறியுள்ளார்.

எல்.ஜி.எம் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு
எல்.ஜி.எம் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு

By

Published : Jul 21, 2023, 10:00 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த படக்குழு

கோவை:கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் எல்ஜிஎம். இப்படம் வரும் ஜுலை 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே கோவையை அடுத்த நிலம்பூர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் எல்ஜிஎம் திரைப்பட குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகைகள் நதியா, இவானா மற்றும் நடிகர் ஹரிஸ் கல்யாண் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

நடிகர் ஹரிஸ் கல்யாண் பேசுகையில், "கோவை வந்தது சந்தோஷம், இயக்குநர் வர முடியவில்லை படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. தோனி அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒவ்வொரிடமும் தனியாக பேசியனார், குடும்பத்துடன் படத்தை பார்த்து ரசித்தார். புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை" என கூறினார். இதற்கான எதிர்பை எப்படி பார்க்கிறிர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "படத்திற்கு தேவைப்பட்டால், தான் அது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டவேண்டும், இதற்கு ஆதரவாக பேசவில்லை" என்றார் நடிகர் ஹரிஸ் கல்யாண்.

தொடர்ந்து பேசிய நடிகை நதியா, "ஹரிஸ் கல்யாணின் அம்மாவாக நடித்துள்ளோன். படம் முழுவதும் ஃபன்னாக எடுக்கப்பட்டுள்ளது. எனக்கு தகுந்த கதை வந்தால் நிச்சயம் நடிப்பேன். தெலுங்கில் அதிகபடங்கள் வந்தது, எனக்கு ஸ்கிரிப்ட் தான் முக்கியம். தோனி படம் எடுக்கிறார் என்று கேள்விப்பட்ட போது, அதிர்ச்சி அடைந்தேன். இந்த பட குழுவினருடன் என்னை பார்க்கும் போது பாட்டி போன்று ஃபீல் ஆகிறது. ஆம் சீனியர் நடிகையாக இருப்பதால் அப்படி உணர்கிறேன்" என்றார் நடிகை நதியா.

சென்னைக்கும் தோனிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் தான் தமிழில் படம் தயாரித்துள்ளார் சப் டைட்டிலுடன் தான் தோனி படத்தை பார்த்தார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் திரையிடப்படுகிறது. ஆக்‌ஷன் பன்ன வேண்டும் என்ற ஆசை உள்ளது. அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை, ஆனால் அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன்" என கூறினார்.

பின், எப்பொழுதும் இளமையாக இருக்க காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "உங்க அன்பு தான் காரணம் , எல்லாம் சாப்பிட வேண்டும், முதல் மாடியாக இருந்தாலும் நடந்தே செல்லுங்கள். அதுதான் என் டயட். கமல் சார் உடன் படம் நடிக்க வாய்ப்பு உள்ளது. அவரும் நடிக்கிறார் நானும் நடிக்கிறேன்" என நடிகை நதியா கூறினார்.

நடிகை இவானா பேசுகையில், “தெலுங்கில் ஒரு படம் நடிக்க உள்ளேன். இன்ஸ்டாவில் 'வாவ்' என்ற ரீல் வைரல் ஆகி உள்ளது எனக்கு தெரியும், 'பூவே பூச்சுடுவா' படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டு தான் நதியா அவர்களை பார்க்க சென்றேன். படம் சூட்டிங் போது என்னை கலாய்ப்பார்கள், அதற்கு அப்ப அப்ப நதியா மேம் கவுண்டர் ஒன்னு கொடுத்துருவாங்க, எல்லாரும் அமைதியாக மாறிடுவாங்க. படம் நன்றாக வந்துள்ளது. எல்லாருக்கும் பிடிக்கும் அளவிற்கு படம் இருக்கும்" என்றார் நடிகை இவானா.

இதையும் படிங்க:Rashmika Mandanna: சமூக வலைதளங்களில் கலக்கும் எக்ஸ்பிரெஷன் குயினின் புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details