கோயம்புத்தூர்: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதியின் இணைய தளம் தொடக்க விழா பந்தய சாலையில் உள்ள சக்தி குழும அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, "பல விழிப்புணர்வு கார்ட்டூன்கள் வரைந்து அசத்திவருகிறார் கார்ட்டூனிஸ்ட் மதி. குடிநீர் வணிகமாக உள்ளது. அது இன்னும் வணிகமாகக் கூடாது என்றால் அதை நாம் சேமித்துவைக்க வேண்டும்.