கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்குட்பட்ட வால்பாறை செல்லும் சாலையில் வரையாடுகள் கூட்டமாக மேய்ச்சலுக்கு வருவதுண்டு. இதனை பார்க்கும் சுற்றுலா பயணிகள் மலை சாலையில் செல்லும்போது விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது, வழியில் வாகனங்களை நிறுத்த கூடாது என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சில சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி வாகனங்களை சாலை நிறுத்தி வரையாடுகளுடன் செல்பி, வீடியோ ஆகியவற்றை எடுக்கின்றனர். இதனால் வாகன ஒட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
வரையாடுகளுடன் செல்பி எடுத்தால் தண்டனை - வனத்துறை எச்சரிக்கை - வரையாடு
கோவை: வால்பாறை மலைப்பாதையில் சுற்றிதிரியும் வரையாடுகளை தொந்தரவு செய்யும் வகையில் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
![வரையாடுகளுடன் செல்பி எடுத்தால் தண்டனை - வனத்துறை எச்சரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4052557-thumbnail-3x2-goat.jpg)
இது குறித்து ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில், ஆழியார் சோதனை சாவடி வழியாக வால்பாறைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனப்பகுதியில் அத்துமீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்ட பின்னே அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்களும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சாலையோரத்தில் மேய்ச்சல்லுக்கு வரும் வரையாடுகளை தொந்தரவு அளிக்கும் வகையில், வனப்பகுதியில் அத்துமீறும் சுற்றுலாப் பயணிகள் மீது வனச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் கடும் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.