கோவை: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர், கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு, "கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்து வரும் புதிய கட்டிடப் பணிகள், வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். தமிழக முதல்வரின் கரங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படும்.
இங்கு தீக்காயத்திற்கு என்று தனி வார்டு கட்டப்படுகிறது. 8 ஆப்ரேஷன் தியேட்டர்கள் மற்றும் 2 சிறு ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டப்படுகிறது. அதேபோல மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க, மருத்துவமனை முழுவதும் தார் சாலைகள் அமைக்கப்படும்.