தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா வழக்கில் கைது - பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை செய்த போலீசார்! - Youth arrested in Ganja case

கோவை: கஞ்சா வழக்கில் கைது செய்து, பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் மேற்கு மண்டல தலைவர்(ஐ.ஜி) பெரியய்யாவிடம் புகார் அளித்துள்ளார்.

பிறப்புறுப்பில்  ஆசிட் ஊற்றி காவல் துறையினர் கொடுமை
பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி காவல் துறையினர் கொடுமை

By

Published : Dec 5, 2019, 1:59 PM IST

நீலகிரி மாவட்டம் தேவாலாப் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் திருப்பூரில் கைத்தறி வேலை செய்து வருகிறார்.

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளிக்காக பந்தலூரில் உள்ள மனைவி, குழந்தையைப் பார்க்க ஆட்டோவில் சென்ற சிவராஜை கஞ்சா வைத்திருப்பதாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்து பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கு முன் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் காயம் குறித்து எதுவும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர்.

பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி காவல் துறையினர் கொடுமை

இந்நிலையில் நேற்று பிணையில் வெளியே வந்த சிவராஜ் கோவை மேற்கு மண்டல தலைவர்(ஐ.ஜி) பெரியய்யாவைச் சந்தித்து புகார் அளித்தார்.

இதையும் படிங்க: நிற்கமால் சென்ற ஷேர் ஆட்டோ; துரத்திய காவல் துறை... பெண் பயணி படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details