தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஆசிட் வீச்சு: பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

கோவை நீதிமன்ற வளாகத்தில் கணவரால் ஆசிட் வீசப்பட்டு பாதிகப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Acid attack by husband her wife
நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஆசிட் வீச்சு

By

Published : Apr 29, 2023, 9:36 PM IST

கோயம்புத்தூர்: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் காத்திப்போர் இடத்தில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் சிவா ஆசிட் வீசி தாக்கினார். அந்த சமயத்தில் கவிதாவின் அருகில் இருந்த சிலரின் மீதும் அந்த ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது.

சில நாட்களாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, அவர் மீது சுமத்தப்பட்ட திருட்டு வழக்கு குறித்த விசாரணைக்காக முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தார். அப்போது கவிதா எதிர்பாராத சமயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் அந்த சம்பவம் நிகழ்ந்த போதே சிவா மடக்கி பிடிக்கபட்டார்.

மேலும் மனைவி மீது ஆசிட் ஊற்றிய சிவாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீசார் அவரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் நீதிமன்ற வளாகத்திற்குள் பட்டப்பகலில் இந்த நடந்ததால் அங்கிருந்த மக்களிடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது . அதன் பின்னர் 80 சதவீதம் காயங்களுடன் உடல் வெந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கவிதாவை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு திடீரென கவிதா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர் கவிதாவின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: High Court: தேவகோட்டை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details