கோயம்புத்தூர்:கடந்த 2020 ஜூலை மாதம் நல்லாம்பாளையம், டவுன்ஹால், ரயில்நிலையம் ஆகிய பகுதிகளில், 4 சிறிய கோயில்கள் அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது, 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில், கஜேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.