கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் ஜவுளி நிறுவனம் நடத்தி வருபவர் கந்தசாமி. இவரிடம் கார்த்திக் என்பவர் காசாளராகப் பணிபுரிந்து வந்தார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக காசாளராக கார்த்திக் பணிபுரிந்து வருவதால், நிறுவனத்தின் அனைத்து கணக்கு வழக்குகளையும் கந்தசாமி நம்பிக்கையுடன் அவரிடம் ஒப்படைத்திருந்தார்.
இந்நிலையில் கந்தசாமி சமீபத்தில் ஜவுளி நிறுவனத்தின் கணக்குகளை சரி பார்த்த போது , ஜவுளி நிறுவனத்திற்கு வரவேண்டிய ரூ.1.25 கோடி மதிப்புள்ள 4,35,200 மீட்டர் காடாத் துணிகள் வராமல் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து விசாரித்தபோது, ஜவுளி நிறுவனத்திற்குக் கடத்திகள் ஏற்றிவரும் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் உலகசாமி துரையுடன் சேர்ந்து, காசாளர் கார்த்திக் மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஜவுளி நிறுவனத்தில் இறக்குமதி செய்ய வேண்டிய காடாத் துணிகளை வேறு பகுதிக்குக் கொண்டு சென்று, விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், காசாளர் கார்த்திக் மோசடியாக பெறப்பட்ட பணத்தை, தனது தந்தை முருகேசனின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளார்.