தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பேருந்து மோதி 75 வயது முதியவர் உயிரிழப்பு! - தனியார் பேருந்து மோதி 75 வயது முதியவர் பலி

கோயம்புத்தூர்: கணுவாய் பகுதியில் தனியார் பேருந்து மோதி 75 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Breaking News

By

Published : Dec 4, 2019, 5:30 PM IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்லையா(75) என்பவர் இரவு வேலையை முடித்து விட்டு, மிதிவண்டியில் வரும்போது, அங்கு வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் அதே பகுதியில் உள்ள காகிதத் தொழிற்சாலையில், பாதுகாவலராக வேலைப் பார்த்து வந்தவர்.

அதே பகுதியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்த இவரின், உறவினர்களும், மகனும் ஈரோட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் இது போன்ற விபத்துக்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன என சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தனியார் பள்ளி அப்பகுதியில் இருந்தும், தனியார் பேருந்துகள் வேகமாகச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து மோதி 75 வயது முதியவர் உயிரிழந்தவர்

இது குறித்து அப்பகுதி மக்கள் அலுவலர்கள் பலரிடம் மனு அளித்ததை அடுத்து, சிறிது மாதங்களுக்கு முன் வேகத் தடை போடப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்விடத்தில் பேருந்துகளும், சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் வேகமாக தான் செல்கின்றன என்றும்; அப்படி வேகமாகச் செல்லும் வாகனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:

கதவை மூடாமல் தூங்கினார் வீட்டிலிருந்த தங்கநகை அபேஸ்!

ABOUT THE AUTHOR

...view details