தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு; பதறவைக்கும் சிசிடிவி! - accident cctv

கோவை: போத்தனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூதாட்டி மீது லாரி மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

accident-cctv
accident-cctv

By

Published : Jan 26, 2020, 3:02 PM IST

கோவை போத்தனூர் அருகேயுள்ள ஈஸ்வர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (69). இவர் ரயில்வே துறையில் ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி அழகர்சாமி தனது மனைவி பத்மா (62) உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

ஜி.டி.டேங்க் பகுதியில் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வேகத்தடை வந்ததால் அழகர்சாமி இருசக்கர வாகனத்தின் வேகத்தைக் குறைத்துள்ளார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி விழுந்த பத்மா மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பத்மா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

படுகாயமடைந்த அழகர்சாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வீரமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் - இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details