கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் குமரன் நகர் பகுதியை சேர்ந்த யூனிஸ் தனது மனைவி திவ்யா பாரதியை பிரசவத்துக்கு அனுமதித்திருந்தார்.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு திவ்யா பாரதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தொடர் சிகிச்சையில் இருந்த தாயும் சேயும் நலமாக இருந்துள்ளனர். நேற்று இரவு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்கு சென்ற அடையாளம் தெரியாத நபர் அந்த குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். குழந்தை காணவில்லை என அதிர்ச்சி அடைந்த யூனிஸ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி உத்தரவின் பேரில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் ஐந்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.