அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாட திராவிடர் விடுதலை கழகத்தினர் எதிர்ப்பு! - கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கோயம்புத்தூர்: அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை விழா கொண்டாடக் கூடாது என திராவிடர் விடுதலை கழகத்தினர் மனு அளித்துள்ளனர்.
திராவிடர் விடுதலை கழகத்தினர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "ஆயுத பூஜை அரசு அலுவலகங்களில் கொண்டாடக் கூடாது. அவ்வாறு கொண்டாடுவது அரசு ஒரு மதத்தை சார்ந்து இருப்பது போல் ஆகிவிடும். அரசு நிர்வாகம் என்பது அனைத்து மக்களுக்கும் சமமாக செயல்படும் நிர்வாகம் என்பதால் ஆயுத பூஜையை கொண்டாடினால் அது ஒரு மதத்தினரின் பண்டிகையை மட்டும் அரசு அலுவலகங்களில் கொண்டாடுவதுபோல் ஆகிவிடும். எனவே அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை கொண்டாட அனுமதி அளிக்கக் கூடாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.