தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் இமயமலையில் ஏறி சாதனை

இமயமலை தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் ஏறி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனின் செயல்பாடு பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் இமயமலையில் ஏறி சாதனை
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் இமயமலையில் ஏறி சாதனை

By

Published : Apr 24, 2022, 10:36 PM IST

கோவைவேடப்பட்டி சக்தி நகர் பகுதியைச்சேர்ந்த சத்தியமூர்த்தி - வினய கஸ்தூரி தம்பதியின் மூத்த மகன் யத்தீந்திரா (12). யத்தீந்திரா ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதை இரண்டாவது வயதில் அறிந்த பெற்றோர், அவருக்கு யோகா, கராத்தே, நீச்சல் பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வந்துள்ளனர்.

மேலும் இமயமலை பகுதிகளில் வழக்கமாக டிரெக்கிங் செல்லும் குடும்ப நண்பரான ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் தனியாக மலையேற்றப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் இமயமலையில் ஏறி சாதனை

இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடர்களில் ஒன்றான 28,000 அடி உயரம் கொண்ட பியாஸ் குண்ட் மலையில் ஆண்ட்ரூ ஜோன்ஸுடன் ஏறத் தொடங்கிய சிறுவன் யத்தீந்திரா 4 நாட்களில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அங்கு தேசியக் கொடியை அசைத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இமயமலைத்தொடர்களில் மலையேற்றப்பயிற்சி மேற்கொண்டு சுமார் 14ஆயிரம் அடி உயரத்தை எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் என்ற சாதனையை யத்தீந்திரா நிகழ்த்தியுள்ளர்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் இமயமலையில் ஏறி சாதனை

இதையும் படிங்க:சதுரங்க விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் பள்ளி மாணவன்!

ABOUT THE AUTHOR

...view details