கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளியில் படித்து வந்த நிலையில், தனது தோழியின் அண்ணன் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி தனது தோழியின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார்.
அப்போது, வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட சக்திவேல் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த பெற்றோர் சிறுமியை கண்டித்து, கேரளாவில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.