கோவை: தடாகம் அருகே ராகவேந்திரா நகரில் காட்டு யானை ஒன்று மலையிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து சென்றது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக யானை சாலையை கடக்கும்வரை பொறுமையாக இருக்கும்படி அவ்வழியாக வாகனங்களில் வந்தோரை எச்சரித்தனர்.
பின்னர் யானை சாலையை கடந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. தகலவறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.