தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி! - A Tribute to a Soldier who died in duty

உடல்நலக்குறைவால் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அனுப்பிவைக்கப்பட்டது.

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி!
பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி!

By

Published : Dec 31, 2022, 12:36 PM IST

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி!

கோயம்புத்தூர்: காரமடை ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் சாமி. இவர் சிக்கிம் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 28 ம் தேதி பணியில் இருந்த போது தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று (டிச.30) இரவு கோவை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. கோவை விமானநிலையத்தில் அவரது உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உறவினர்களும் அஞ்சலி செலுத்தி அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் காரமடையில் உள்ள அவர்களது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க: கடன் அன்பை முறிக்கும்; கழுத்தையுமா அறுக்கும்: திருச்சியில் நடந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details