கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்தவர் நர்மதா. திருமணம் ஆன இவர் சில மாதங்கள் சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது நர்மதாவிற்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த டாக்சி ஓட்டுநர் ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாகப் பழகிய இருவரும் ஒன்றாக இருப்பது போல் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நர்மதாவை ராஜா வற்புறுத்தி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்நபரின் தொல்லை தாங்க முடியாமல் நர்மதா தனது சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார்.
இதனையடுத்து, நர்மதாவின் கோவை முகவரியை தெரிந்து கொண்ட ராஜா, கோவைக்கும் வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதோடு, திருமணத்திற்கும் சம்மதிக்காவிட்டால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய டாக்ஸி ஓட்டுநர் கைது இது குறித்து அப்பெண் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பெண் அளித்தப் புகாரின் பேரில் பெண்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அந்நபரைக் கைது செய்த காவல்துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:'சைக்கோ' பட பாணியில் நடந்த கொலைச் சம்பவம் - தலையைத் தேடிவரும் காவல்துறை!