அண்மையில் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தொழில் அமைப்புகள் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இதுவரை சிறு,குறு தொழில் முனைவோரின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் , கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக கோவையில் போசியா தொழில் கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு... தொழில் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் இதில் 18 சிறு,குறுதொழில் அமைப்புகளை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் பங்கேற்று கதவடைப்பு செய்தனர். காலை 6 மணி முதலே சிறு,குறு தொழில் கூடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு... தொழில் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் இது குறித்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில்
சிறு, குறு தொழில் கூடங்கள் பயன்படுத்தும் தாழ்வழுத்த மின்சாரத்திற்கு
பீக்ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், நிலை கட்டணம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்ற இரு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடைபெறுகிறது.
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு... தொழில் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்களும் டாடபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு... தொழில் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் போராட்ட குழுவினர் ஒன்று கூடி அடுத்த கட்ட போராட்டத்தை முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். முன்னதாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க ; ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ...ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்