தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு விவகாரத்திற்கு விஞ்ஞான முறையில் தீர்வு - பசுமைத்தீர்ப்பாய மாநிலக் கண்காணிப்புக்குழு - கோவை

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு விவகாரத்திற்கு விஞ்ஞான முறையில் தீர்வு காண வேண்டும் எனவும்; தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், நீதியரசருமான டாக்டர். ஜோதிமணி பேட்டியளித்துள்ளார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரத்திற்கு விஞ்ஞான முறையில் தீர்வு - தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநிலக் கண்காணிப்புக் குழு தலைவர்
வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரத்திற்கு விஞ்ஞான முறையில் தீர்வு - தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநிலக் கண்காணிப்புக் குழு தலைவர்

By

Published : Oct 7, 2022, 10:06 PM IST

கோவை:திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், நீதியரசருமான டாக்டர்.ஜோதிமணி நேற்று வெள்ளலூர் குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள மக்களிடம் குப்பைக்கிடங்கால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின்னர் நீதியரசர் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'வெள்ளலூர் குப்பைக்கிடங்கு செயல்பாடுகள் விதிமுறைகளின்படி செயல்படுகின்றதா என ஆய்வு செய்தோம். குப்பைக்கிடங்கு மற்றும் அதனைச்சுற்றி இருக்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. குப்பைக்கிடங்கால் பொதுமக்கள் நிறைய கஷ்டங்களுக்கு உள்ளாகின்றனர். 20 ஆண்டுளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
குப்பைக் கிடங்கை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், கோவிட் பரவல் காரணமாக அதை சரியாக செய்ய முடியாத நிலை இருந்து வருகின்றது. இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பொதுமக்கள், ஆட்சியர், ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகளை அடுத்த 15 மாதங்களுக்குள் முழுமையாகத் தீர்வு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும்.

வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரத்திற்கு விஞ்ஞான முறையில் தீர்வு - தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநிலக் கண்காணிப்புக் குழு தலைவர்

கோவை மாநகராட்சியில் தற்போது உள்ள நுண் உர தயாரிப்பு மையங்களை முழுமையாக 4 வாரத்தில் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைக்கிடங்கை முழுமையாக அகற்ற நீதிமன்றம் வழங்கிய சட்டப்படியான காலம் முடிந்து விட்டது என்றாலும், பொவதுமக்கள் நலன் கருதி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் குப்பைகளை எந்தெந்த இடங்களில் அகற்ற வேண்டும் என்பதையும், உடனடியாக சில தீர்வுகள் ஏற்படுத்தும் பணிகளையும் அறிவுறுத்தியுள்ளோம்.

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு விவகாரத்திற்கு விஞ்ஞானமுறையில் இதற்குத்தீர்வு காண வேண்டும். வெள்ளலூரில் நிலத்தடியில் இருக்கும் நச்சுத்தன்மை கொண்ட தண்ணீர் அகற்றப்பட வேண்டும். 15 மாதங்களில் முழுமையாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் இதை செய்து முடிப்பதாக தெரிவித்துள்ளனர்.

நுண்உர தயாரிப்பு மையங்களால் பிரச்னை இருக்காது. இதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். குப்பை லாரிகளில் இருந்து குப்பைகள் சிதறாமல் போகவேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றோம். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். பயோமைனிங் செய்வது மட்டுமே வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு சரியான தீர்வு. குப்பைக்கிடங்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு மெடிக்கல் கேம்ப் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப்பகுதியில் நிலத்தடி நீர் 200 விழுக்காடு டிடிஎஸ் அதிகமாக இருக்கின்றது என மாசு கட்டுப்பாட்டு அலுவலர்களும் தெரிவித்துள்ளனர். நுண்உர தயாரிப்பு மையம் என்ற நடைமுறை கும்பகோணத்தில் முதலில் கொண்டு வரப்பட்டது. இப்போது எல்லா பகுதிகளிலும் கொண்டுவரப்பட்டு வருகின்றது. இதனால் பாதிப்புகள் கிடையாது. கோவையில் அலுவலர்கள் ஒத்துழைப்பு இருந்தால் விரைவில் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணமுடியும்.

கோவை மாநகராட்சியில் மொத்தம் 69 நுண் உர தயாரிப்பு மையங்கள் அமைக்கத்திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், இவற்றில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட 34 மையங்களில் 12 மட்டுமே செயல்பட்டு வருகிறது. செயல்படாத நுண்உர மையங்களை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், புதிய மையங்களை விரைவில் அமைக்கவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வரும் 17ஆம் தேதி கூடும் சட்டப்பேரவை... அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை யாருக்கு?; பதில்கூறிய சபாநாயகர்

ABOUT THE AUTHOR

...view details