கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் மருத்துவர் எஸ். வேலுமணி எழுதிய "கட்டுப்படுத்துங்கள் வெல்லுங்கள் நீரிழிவு நோயை" புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை ஓய்வு பெற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் வெளியிட, ஓய்வு பெற்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் அசோக் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் இப்புத்தகம் குறித்து மருத்துவர் எஸ்.வேலுமணி உரை ஆற்றினார்.
விழாவில் புத்தகத்தை தயாரித்த வேலுமணி பேசும்போது, “வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் சர்க்கரை நோய், மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய சீர்கேட்டை உருவாக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு மக்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதற்கு கோவை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நீரழிவு நோயை தடுக்க ஆரம்ப காலத்திலேயே நாம் விழிப்புணர்வுடன் இருந்து மீளலாம் உணவு கட்டுப்பாடு தினசரி உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை தடுக்கலாம்” என்றார்.