தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்று வந்தவர் தற்கொலை! - suicide in Isha Yoga Center

ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்று வந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் தற்கொலையால் உயிரிழந்தார்.

ஈஷா யோகை மையத்தில் பயிற்சி பெற்று வந்தவர் தற்கொலை!
ஈஷா யோகை மையத்தில் பயிற்சி பெற்று வந்தவர் தற்கொலை!

By

Published : Jul 22, 2022, 5:05 PM IST

Updated : Jul 22, 2022, 5:20 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் வந்து செல்கின்றனர். இதில், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரமணா கொல்லு (32) என்பவர், கடந்த சில நாட்களாக கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஈஷா யோகா மையத்தில் ரமணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக இது குறித்து ஆலாந்துறை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சொந்த செலவில் விமானத்தில் வந்த 41 மலைவாழ் பழங்குடியினர் - ஈஷா மையம் குறித்து பெருமிதம்!

Last Updated : Jul 22, 2022, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details