கோயம்புத்தூர்:சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளரிடம் வாய் தகராறில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வலைதளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
இதனிடையே கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறான வார்தைகளால் பேசி தன்னுடைய முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினம் (ஜன.04) இரவு பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.