கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சிப் பிரிவு இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அபு. முழு ஊரடங்கின்போது அவரது வீட்டில் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக கூறப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் ஜமாத்திடம் புகார் அளித்துள்ளனர்.
வீட்டில் மது சப்ளை: போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்! - மது பாட்டில்கள் விற்பனை
கோயம்புத்தூர்: இட்டேரி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தவரை பிடித்த பொதுமக்கள் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜமாத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் சிலர் அபுவின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போத்தனூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் அபுவை ஒப்படைத்தனர். மேலும், அவரது வீட்டிலிருந்த மது பாட்டில்களையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.