தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் நாய், பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு!

கோவையில் வீட்டில் வளக்கும் செல்லப்பிராணிகள் மற்றும் தெருவில் உள்ள நாய், பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

Small animal crematorium
நாய், பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம்

By

Published : Jun 13, 2023, 1:26 PM IST

கோவையில் நாய், பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு

கோயம்புத்தூர்: சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிளப் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாய் மற்றும் பூனைகளுக்கான மின்மயானம் துவங்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்வெட்டை திறந்து வைத்த பின்னர், தகன மேடைகளை பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் கூறியது, "நாய்களுக்கான மின் மயானம் தனியார் அமைப்பு மூலமாக, கோவையில் சுமார் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தங்களது வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை இங்கு தகனம் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்து.

மேலும், இங்கு சாலையில் உயிரிழக்கும், தெரு நாய்களை இலவசமாக தகனம் செய்து கொள்ளவும், ஒரு நாளைக்கு ஆறு நாய்கள் எரியூடப்படும் வகையில், உருவாக்கபட்டுள்ளது. இந்த மின் மயானம் தற்போது முழுக்க முழுக்க, எல்பிஜி கேஸ் மூலமாக இறந்த விலங்குகளின் முழு கழிவுகளும், முற்றிலும் எரிக்கப்பட்டு அதன் மாசு வெளியே போகாமலும் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார முறைகேடுகளும் இல்லாமல், மேலே புகை செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேடம் நீங்களா..? ஷர்மிளாவுக்கு ஷாக் கொடுத்த வானதி.. கோவை பேருந்தில் கலகல பயணம்!

அதைத் தொடர்ந்து, வீட்டு நாய்கள், பூனைகளை இங்கு எரியூட்ட, எவ்வளவு செலவாகும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு: அதனை நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம், எல்பிஜி கேஸ் செலவு பிற செலவுகளை கனக்கிட்டு அதற்கான கட்டணத் தொகை அறிவிக்கபடும் என்றார்.

மேலும் மாநகரில், சாலை ஓரங்களில் உயிரிழக்கும், நாய் பூனைகளை யார் வேண்டுமானாலும் இங்கு கொண்டு வரலாம் எனவும், தெரு நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக, நாய்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றதில், தோராயமாக ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளது. தெரு நாய்கள் இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல், இந்த மின்மயானத்தில் தகனம் செய்வதால், பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இயற்கை பிரியர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதே நிலை தொடர்ந்தால், கோவை புறநகர் பகுதியிலும் மின்மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்" எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Pudukkottai Bus Stand: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details