கோவை: மேட்டுப்பாளையம் அருகே சோமையனூரைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி மகாலட்சுமி. தம்பதிக்கு ஒரு மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சரவணகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி கணுவாய்ப்பாளையத்தில் உள்ள தனது தாய் நாகமணியுடன் வசித்துவந்தார். மகாலட்சுமி அடிக்கடி அலைபேசியில் பல்வேறு நபர்களிடம் பேசிக் கொண்டு, அவரது பிள்ளைகளைச் சரிவர கவனிக்கவில்லை என நாகமணி ஆத்திரமடைந்துள்ளார்.
பல்வேறு நபர்களுடன் மண பந்தத்தைத் தாண்டிய உறவு
அலைபேசி பேச்சு தொடர்ந்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. மேலும் பல்வேறு நபர்களிடம் மகாலட்சுமிக்குத் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையில், மகாலட்சுமி தனது தாயைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த நாகமணி, தனது அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று (ஜூலை 11) மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.