கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார்(38). இவர், மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால், இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.
பிரதீப்குமாரின் அட்டூழியத்தைத் தாங்கமுடியாமல் அவரை மது பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்காக கோவில்பாளையம் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தனர். ஆனால் அங்கிருந்து தப்பிய அவர், மீண்டும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து அவரது மனைவி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல் துறையினர், பிரதீப்குமாரை எச்சரித்து காவல் நிலையம் வந்து செல்லுமாறும் அதன்பின் மறுவாழ்வு மையத்திற்கு சென்று விட வேண்டும் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.