கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள குடியிருப்புக்கு அருகே நேற்று (ஜூலை 24) மாலை ஆண் யானை ஒன்று வந்தது. அதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மருதமலை பகுதியில் சுற்றித்திரிந்த ஆண்யானை! - Coimbatore District News
கோவை: மருதமலை பகுதியில் ஆண்யானை ஒன்று சுற்றித் திரிந்ததால் இரவு முழுவதும் வனத்துறையினர் காவலுக்கு இருந்தனர்.
ஆண்யானை
தகவலறிந்து வந்த வனத்துறையினர் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பாதுகாப்பிற்கு நின்று யானை ஊருக்குள் வராமல் கண்காணித்து வந்தனர். மேலும் யானை ஊருக்குள் வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:மோதி பாக்கலாம் வாடா... சண்டையிடும் மான்கள் - வைரல் காணொலி!