தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு நேரத்தில் சுற்றித் திரியும் காட்டுயானை - பொதுமக்கள் பீதி! - ஒற்றை காட்டுயானை

கோயம்புத்தூர்: தடாகம் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டுயானையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

A lone wild elephant roaming at night in Coimbatore
A lone wild elephant roaming at night in Coimbatore

By

Published : Dec 26, 2020, 3:33 PM IST

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கடந்த சில நாள்களாக காட்டு யானை ஒன்று அப்பகுதியில் சுற்றி வருவதாக பொதுமக்கள் கூறி வந்தனர். யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று (டிச.25) இரவு சுமார் 9 மணியளவில் தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் காட்டுயானை ஒன்று அவ்வழியே வந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

இரவு நேரத்தில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டுயானை

யானை அவ்வழியே செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதில், யானை நடமாட்டம் உள்ள நேரத்தில் மக்கள் வாகனங்களில் பயணிப்பதும் பதிவாகியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் யானை நடமாட்டம் இருப்பதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: வால்பாறையில் உலா வரும் யானை கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details