தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை கூட்டம் - வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை அருகே ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளை சூறையாடிய காட்டு யானை கூட்டதால் பரபரப்பு நிலவியது.

வால்பாறை பகுதியில் ரேஷன் கடை உடைத்த காட்டு யானை கூட்டம்
வால்பாறை பகுதியில் ரேஷன் கடை உடைத்த காட்டு யானை கூட்டம்

By

Published : Oct 27, 2022, 9:51 AM IST

கோயம்புத்தூர்: வால்பாறையை அடுத்த தாயமுடி எம்.டி. பகுதியில் துளசி மகளிர் சுய உதவி குழு நியாய விலை கடை இயங்கி வருகிறது. இங்கு அதிகாலையில் நுழைந்த காட்டு யானை கூட்டம் கடையை உடைத்து ரேஷன் அரிசி மூட்டைகளை இழுத்து சூறையாடியது.

சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கு 13 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடையை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது.

பின்னர் அங்கு விரைந்த வனத்துறையினர் சத்தமிட்டு யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டினர். இதனால் மீதமுள்ள அரிசி மூட்டைகள் தப்பியது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது, எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊருக்குள் புகுந்த முதலை - வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details